கோலி தடுமாற காரணமே இதுதான் - அனில் கும்ப்ளே கடும் விமர்சனம்
விராட் கோலியின் செயல்பாடுகளை அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார்.
IND vs NZ
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பின் 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்துள்ளது. நியூசிலாந்து இதுவரை 301 ரன்கள் முன்னிலை பெற்று ஸ்ட்ராங்காக உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே,
கோலி தடுமாற்றம்
"ஓரிரு உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருந்தால் அது இங்கு உதவியிருக்கும். ஏனெனில் முதன்மையான போட்டியில் விளையாடுவது பயிற்சி எடுப்பதை விட அதிகமாக உதவும். அது உங்கள் கையை ஓங்க வைக்கும். அதே சமயம் சுழலுக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவதற்கு அது மட்டுமே காரணம் என்று நான் நினைக்கவில்லை.
களத்திற்கு அவர் பேட்டிங் செய்ய வரும்போது பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது. இன்னிங்சின் தொடக்கத்தில் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அவர் சவால் கொடுக்கும் முனைப்புடன் விளையாடினார். ஆனால் சூழ்நிலைகள் எதிரணி ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தன.
ஒரு தந்திர நகர்வால் கொண்டு வரப்பட்ட கிளென் பிலிப்ஸ் சுழலில் சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் வெளியேற்றத்துக்கு முக்கிய பங்காற்றியது” எனத் தெரிவித்துள்ளார்.