கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் - என்ன காரணம்?
இரண்டாவது டெஸ்டில் கே.எல் ராகுலை நீக்கி சர்பராஸ் கானுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
IND vs NZ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது போட்டியானது அக்டோபர் 24-ஆம் தேதி இன்று புனே நகரில் துவங்கியது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சர்பராஸ் தான் ஆறாவது இடத்தில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.எல் ராகுல் நீக்கம்
முதல் டெஸ்ட் போட்டியின் போது கழுத்து வலி காரணமாக விளையாடாமல் இருந்த நட்சத்திர வீரர் சுப்மன் கில் உள்ளே வந்ததால் கே.எல் ராகுல் அல்லது சர்பராஸ் கான் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அந்த வகையில் தான் தற்போது கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவரது இடத்தில் சர்பராஸ் கான் விளையாடுகிறார். முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமலும் இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களை மட்டுமே கே.எல் ராகுல் குவித்திருந்தார்.
சர்பராஸ் முதல் நான்கு போட்டிகளில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என அசத்தலான பார்மை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.