நான் விராட் கோலியின் பெரிய ரசிகை.. சட்டென்று ரோஹித் சர்மா கொடுத்த ரியாக்ஷன்- வீடியோ வைரல் !
"நான் விராட் கோலியின் பெரிய ரசிகை அவரை கேட்டதாகச் சொல்லுங்கள்" எனப் பெண் ரசிகை ஒருவர் கூறியதற்கு ரோஹித் சர்மா கூறிய பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித் சர்மா
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனேவில் நடைபெற உள்ளது. இதற்காக பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்குச் சென்றார்கள்.
அப்போது மைதானத்தில் பெண் ரசிகை ஒருவர் ரோஹித் சர்மா செல்வதைப் பார்த்தார்.பார்த்தவுடன் வேகமாக ரோஹித் பாய்…ரோஹித் பாய்… எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுங்கள் எனக் கேட்கிறார்.
இந்த சத்தத்தைக் கேட்ட ரோஹித் சர்மாவுன், வேகமாக அவரிடம் இருந்த பெண் மற்றும் நோட்டை வாங்கி தன்னுடைய ஆட்டோகிராஃப்பை போட்டுக்கொடுத்தார்.இந்த சம்பவத்தால் அந்த பெண் ரசிகை சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.
நெகிழ்ச்சி
அதுமட்டுமில்லாமல் ரோஹித் ஆட்டோகிராஃப் போட்டவுடன் அந்த ரசிகை ஆனந்தக் கண்ணீரில் நன்றி நன்றி ரோஹித் பாய் எனக் கூறினார். அப்போது விராட் கோலியின் தீவிரமான ரசிகை நான். நான் அவரை கேட்டதாக எனக்காக அவரிடம் சொல்வீர்களா? எனக் கேட்கிறார்.
அதற்கு ரோஹித் சர்மாவும் சிரித்துக்கொண்டு “கண்டிப்பாக விராட் கோலியிடம் சொல்கிறேன்” எனக் கூறினார்.இதனால் அந்த பெண் ரசிகை நெகிழ்ச்சியடைந்தார்.
இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.