இந்தியாவுக்கு எதிரான போட்டி; விலகிய கேன் வில்லியம்சன் - அணிக்கு திரும்புவாரா?
கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
எப்போது திரும்புவார்?
முன்னதாகவே, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில்,
"கேன் வில்லியம்சனின் காயத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவர் குணமடைய இன்னும் சிறிது நேரம் அவகாசம் அளிக்கிறோம். மூன்றாவது டெஸ்டில் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.