2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே CEO விளக்கம்
வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா என சென்னை அணியின் CEO விளக்கமளித்துள்ளார்.
2025 ஐபிஎல்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்படும் வீரர்களின் விவரங்களை வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். இந்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, சிஎஸ்கே அணி அவரை தக்க வைக்குமா என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தோனி
இந்த நிலையில் நேற்று(20.10.2024) நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "தோனி விளையாடவேண்டும் என்பது ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ரொம்ப ஆசை இருக்கிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
அவர் தான் இது குறித்து முடிவெடுத்து வைத்திருப்பார். வருகின்ற 31-ஆம் தேதி என்னவென்று தன்னுடைய முடிவைச் சொல்வதாக எங்களிடம் தெரிவித்து இருக்கிறார்" என தெரிவித்தார்.