கோலி, ரோஹித் இல்லை - அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் இவர்தான்!
அதிகம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் லிஸ்டில் யார் முதலிடம் தெரியுமா?
அதிக சம்பாத்யம்
ஐபிஎல் ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் போன நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் மூலம் அதிக வருவாய் பார்க்கும் வீரர் அவர்தான் என கருதப்படுகிறது.
முன்பு மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா ரூ. 24.75 கோடி கொடுத்து ஏலம் எடுத்த நிலையில், அதை இப்போது ரிஷப் பண்ட் ஓவர்டேக் செய்துள்ளார். இதன் மூலம் பண்டிற்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி கிடைக்கும். மேலும், பிசிசிஐ வருடாந்திர ஒப்பதந்திலும் பி பிரிவில் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும்.
யார்? யார்?
இவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராரன கோலி உள்ளார். பெங்களூர் அணி நிர்வாகம் ரூ. 21 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. பிசிசிஐ ஒப்பந்தத்தில் அவர் ஏ பிளஸ்ஸில் இருப்பதால் அவருக்கு ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியமாக கிடைக்கிறது.
மூன்றாவது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் ஆட மறுத்ததால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் பிசிசிஐ ஆண்டு வருமானம் அவருக்கு கிடைக்காது. ஆனால் ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.