சச்சின் ரெக்கார்டை உடைத்த ஜோ ரூட் - வரலாற்றில் மாபெரும் சாதனை!
ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்
ஹாக்லி ஓவலில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்த சாதனையை செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜோ ரூட் சாதனை
ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் 1630 ரன்களை எடுத்துள்ளார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸ்களில் மட்டும் 1625 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன் சாதனையையும் நெருங்கி வருகிறார். இந்த சாதனையில் முதல் இரண்டு இடங்களில் ஜோ ரூட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ள நிலையில், தலா 1,611 ரன்களுடன் அலஸ்டர் குக் மற்றும் கிரேம் ஸ்மித் உள்ளனர்.