ஆஸி. பிரதமர் சொன்ன வார்த்தைக்கு கோலி தந்த பதிலடி - யாருமே எதிர்பார்க்கவில்லை!
ஆஸ்திரேலியா பிரதமருக்கு கோலி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசத்திய இந்திய அணி
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்திலான மாபெரும் வெற்றியை பதிவுசெய்தது. இந்நிலையில், டிசம்பர் 6-ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பிரதமர் 11 அணி மற்றும் இந்திய ஏ அணிக்கு இடையே பிங்க் பால் கொண்ட பயிற்சி ஆட்டம் நடக்கவுள்ளது.
கோலியின் பதில்
முன்னதாக கான்பெராவில் உள்ள பார்லிமெண்ட் மாளிகையில் இந்திய அணியை ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சந்தித்தார். அப்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய சக கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
Team India meets with Australian Prime Minister Anthony Albanese at Parliament House.pic.twitter.com/NT93lwveuv
— Sujeet Suman (@sujeetsuman1991) November 28, 2024
தொடர்ந்து விராட் கோலியுடன் சில வார்த்தைகளை ஆஸ்திரேலியா பிரதமர் பகிர்ந்து கொண்டபோது, அதற்கு கோலி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கோலியிடம் “பெர்த் மைதானத்தில் உங்களுக்கு நல்ல நேரம். பிளெடி ஹெல் (ஏமாற்றத்தை வெளிப்படுத்தி), ஆனாலும் எங்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை” என்றார்.
இதற்கு பதிலளித்த கோலி, “அப்படியானால் நீங்கள் அதில் சில காரசாரமான விஷயங்களை சேர்க்கவேண்டும்” என கூறினார். உடனே பிரதமர், ”இந்தியாவிற்கு அது நன்றாக தெரியும்” என்று சிரித்தார்.