ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லை..? பும்ராதான் கேம் சேஞ்சர் - ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு!
ஜஸ்ஸி பாயை மட்டும் தான் நம்புகிறோம் என்று ரிஷப் பண்ட் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பும்ரா..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி அஸ்திரேலியாவின், பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முறை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கலந்துகொள்ளாத நிலையில்,
தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்ப்பட்டார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செயத இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன் பிறகு பேட்டிங்கை ஆடிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜஸ்பீரித் பும்ராவின் புயலில் சிக்கி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் அபாரமாக விளையாடியது. இந்த போட்டியில் ஆபாரமாக ஆடி தனது முப்பாதாவது சதத்தை பதிவு செய்தார்.
ரிஷப் பண்ட்
கோலி சதம் அடித்தவுடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக 534 ரன்கள் நிர்ணயித்தது. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் ஜாஸ்ஸி பாய் (பும்ரா), மியான்( சிராஜ்), ராணா, கேஎல் பாய்( ராகுல்), YJ( ஜெய்ஸ்வால்) மற்றும் விராட் பாய் ஆகியோரை மட்டுமே நம்புகிறோம்.. ஏனெனில் அவர்கள் கேம் சேஞ்சர் பிளேயர்கள். இவ்வாறு அவர் கூறியிருப்பது அவர் ரோகித் சர்மாவின் மீது அதிருப்தியில் உள்ளாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.