விதிகளை மீறிய பும்ரா.. அவரை தடை செய்யணும் - கொதிக்கும் ஆஸி ரசிகர்கள்!
பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பாக உள்ளதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பும்ரா..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி அஸ்திரேலியாவின், பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்முறை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கலந்துகொள்ளாத நிலையில்,
தற்காலிக கேப்டனாக பும்ரா செயல்ப்பட்டு வருகிறார். இந்த சூழலில், போட்டியில், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய இறங்கியது. அதில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். அடுத்ததாக ஆடிய ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தனர்.
பும்ரா வேகப்பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது நாளிலும் பும்ரா தனது 11வது "5 விக்கெட் ஹால்" சாதனையை செய்தார். அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறியதை பார்த்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர்
சமூக வலைதளங்களில் பும்ரா பந்து வீசுவது சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் விதிகளுக்கு புறமானது என கருத்துக்களை தெரிவித்தனர். அதாவது, அவர் தனித்துவமான பந்துவீசும் முறையை கடைபிடிக்கும் நிலையில்,
ஆஸி ரசிகர்கள்
அவரது முழங்கை மடிந்து இருப்பதாகவும், அவர் பந்தை எறிவதாகவும் பலர் சர்ச்சையை கிளப்பினர். ஆனால் பும்ரா இந்த சர்ச்சை முதல் முறை சந்திக்கவில்லை. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரில்
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு சர்ச்சையானதை தொடர்ந்து, பும்ரா வீசுவது மட்டும் சரியா? என்ற கேள்வியும் எழுந்தது. இது குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரரும், பவுலிங் பயிற்சியாளருமான இயான் பான்ட் விளக்கமளித்துள்ளார்.
பும்ராவின் பந்துவீச்சு எப்படி விதிகளுக்கு உட்பட்டது என்றால் ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளில் இருக்கும் ஹைப்பர் மொபைலிட்டி (Hypermobility) என்ற விதிமுறையின்படி பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டது தான் என அவர் விளக்கம் அளித்திருந்தார்.
எனவே, பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமாக இருப்பதால் அது சில ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பந்தை எறிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அவர் அதிக விக்கெட் வீழ்த்தியதாலேயே ஆஸ்திரேலிய ரசிகர்கள் இப்படி சர்ச்சையை கிளப்பி வருவதாக இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.