அணிக்கு விசுவாசமாக இருந்தேன்..மும்பை இந்தியன்ஸில் நடந்த செயல் -ராபின் உத்தப்பா ஷாக் தகவல்!
மும்பை இந்தியன்ஸிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மாற்றப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
2008 ஆம் ஆண்டு IPL தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். அவர் 14 போட்டிகளில் 35.55 சராசரி மற்றும் 114.69 ஸ்ட்ரைக் ரேட்டில் 320 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு மாற்றப்பட்டது குறித்து ராபின் உத்தப்பா பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விசுவாசமாக இருப்பதால் என்னால் அந்த அணியை விட்டு வெளியேற விரும்பவில்லை என்று கூறினேன்.
ராபின் உத்தப்பா
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம், நீங்கள் வெளியேறவில்லை என்றால், நீங்கள் மும்பைக்காக எந்தப் போட்டியிலும் விளையாட உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியது.
அப்போதுதான் நான் நன்றாக உணர்ந்து கொண்டேன் . அவர்கள் என்னை விரும்பவில்லை என்று கூறினார்.
மேலும் நான் ஆர்சிபியை சேர்ந்தவன் என்று எந்த நேரத்திலும் நான் உணரவில்லை.மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விசுவாசமாக இருந்ததால் தான் என்னை விரட்டிவிட்டார்கள் என்று மன வருத்தத்துடன் தெரிவித்தார்.
கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.