விராட் கோலி எப்பவுமே கெத்து தான் - புகழ்ந்து தள்ளிய கே.எல்.ராகுல்
அண்மை காலமாக விராட் கோலிக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பிய நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
கோப்பையை வெல்லுமா? இந்தியா
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க போட்டிகளில் ஒன்று.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரின் கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு போட்டிகளில் தனது பேட்டிங்கில் சொதப்பி வரும் விராட் கோலி இந்த தொடரிலாவது தனது அதிரடி ஆட்டத்திற்கு திரும்புவரா? என அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த வீரர்
இதனிடையே இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல்.ராகுல், விராட் கோலிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய கே.எல்.ராகுல், வெளியே இருந்து வரும் கருத்துகளுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அது உண்மையில் ஒரு வீரரைப் பாதிக்காது, குறிப்பாக விராட் கோலி போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர் வெளியில் இருந்து வரும் கருத்தால் பாதிக்கப்படமாட்டார். அவருக்கு சிறிய இடைவேளி கிடைத்தது.
அவர் தனது விளையாட்டில் கவனம் செலுத்துகிறார். நான் காயமடைந்து 2 மாதங்கள் வீட்டில் இருந்த போது அவரை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன், அவர் பார்மில் இல்லை என்று நான் ஒரு சமயம் கூட உணரவில்லை என்று தெரிவித்தார்.
100 போட்டிகள் ஒற்றை சதம் கூட இல்லை: சோகத்தில் மூழ்கும் விராட் கோலி ரசிகர்கள்!