திடீரென விலகிய விராட் கோலி; டெஸ்ட் அணியை வழிநடத்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்
கடந்த 7 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தி வந்த விராட் கோலி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, கடந்த 7 வருடத்திற்கும் மேலாக இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார்.
டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்சி மீது பல விமர்ச்சனங்கள் இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை விட யாராலும் சிறப்பாக வழிநடத்த முடியாது என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
விராட் கோலி இன்னும் குறைந்தது ஒரு வருடமாவது டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்,
ஆனால் விராட் கோலியோ திடீரென டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிகொள்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.
விராட் கோலி திடீரென விலகியதால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ரோஹித் சர்மா;
ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளுக்கான புதிய கேப்டனான ரோஹித் சர்மாவிடமே டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மீதான அதிக அழுத்தத்தை கருத்தில் கொண்டு ஒரே வீரர் அனைத்து பொறுப்புகளும் சுமத்தப்படக்கூடாது என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தாலும்,
சமீபத்தில் பிசிசிஐ., ரோஹித் சர்மாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதை பார்க்கும் பொழுது ரோஹித் சர்மாவிடமே டெஸ்ட் கேப்டன்சியும் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.