சாண்ட் பேப்பர் இல்லை.. உங்களைப் போல் பந்தைச் சேதப்படுத்த மாட்டோம்- ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி

Virat Kohli Cricket Viral Video
By Vidhya Senthil Jan 05, 2025 01:15 PM GMT
Report

 பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார்.

 விராட் கோலி

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 161 ரன்களை எடுத்தது.மேலும் 162 ரன்கள் இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மார்னஸ் லபுஷேன் 6 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

10 ஆண்டுகள் ஆச்சு.. விராட் இதை சாப்பிட்டது கிடையாது - ரகசியத்தை சொன்ன அனுஷ்கா!

10 ஆண்டுகள் ஆச்சு.. விராட் இதை சாப்பிட்டது கிடையாது - ரகசியத்தை சொன்ன அனுஷ்கா!

பதிலடி

அப்போது இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் மைதானத்தில் குரல் எழுப்பினர். இதனை கவனித்த விராட் கோலி, தன்னுடைய பேண்ட் பாக்கெட்டை உள்ளிருந்து வெளியில் இழுத்து ரசிகர்களிடம் காண்பித்தார்.

ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி

மேலும் தன்னிடம் 'சாண்ட் பேப்பர் இல்லை என்றும், நாங்கள் உங்களைப் போல் பந்தைச் சேதப்படுத்த மாட்டோம் என்றும் சைகையில் ரசிகர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.