பும்ரா அணிக்கு எப்போது திரும்புவார்? பெரிய பிரச்சனை - பிசிசிஐ அப்டேட்!
பும்ரா, எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பும்ரா
5ஆவது டெஸ்டில், இரண்டாவது நாளின் முதல் செஷனின் கடைசி 5 ஓவர்களில், பும்ரா 3 ஓவர்களை வீசினார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ஒரு ஓவர் மட்டுமே வீசிய பும்ரா,
பந்து வீசுகையில் சிறுது பிரச்னை இருப்பதால் ஸ்கேன் எடுக்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இதனால் அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.
அணிக்கு திரும்புவாரா?
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினர். தற்போது இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. இதில் பும்ரா பந்துவீச வாய்ப்பு குறைவு எனக் கருதப்படுகிறது.
Jasprit Bumrah has left the SCG: https://t.co/0nmjl6Qp2a pic.twitter.com/oQaygWRMyc
— cricket.com.au (@cricketcomau) January 4, 2025
பிசிசிஐ இதுகுறித்து தெளிவான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. காயத்தின் தன்மை சிறியதாக இருந்திருந்தால், அறிக்கை வெளியிடப்பட்டிருக்கும், பெரிய பிரச்சினை இருக்கும் என்பதால்தான், அறிக்கை வர காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.