சச்சின்,தோனி பின்னுக்கு தள்ளிய விராட் கோலி;டாப் லிஸ்டில் புதிய உச்சம் ..வெளியான விவரம்!

Virat Kohli Cricket Indian Cricket Team
By Vidhya Senthil Sep 05, 2024 07:21 AM GMT
Report

 இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தாண்டு கட்டிய வருமான வரி தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

விராட் கோலி 

பிசிசிஐ தனது A+, A, B, C என வீரர்களை வகைப்படுத்தி அதற்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது .

சச்சின்,தோனி பின்னுக்கு தள்ளிய விராட் கோலி;டாப் லிஸ்டில் புதிய உச்சம் ..வெளியான விவரம்! | Virat Kohli Highest Tax Paying Sportsperson

அந்த வகையில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களாக இருக்கிறார்கள்.இவர்கள் A+ பிரிவில் உள்ளதால் வருடத்துக்கு ரூ.7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் மூலமாகவும் வருமானம் வருகிறது.

அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்!

அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்!

இதனையடுத்து சீனியர் வீரர்கள் முதல் முன்னணி வீரர்கள் பலரும் ,விளம்பரம் ,தொழில் முதலீடுகள் போன்றவற்றில் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறார்கள்.

வருமான வரி

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தாண்டு கட்டிய வருமான வரி தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், விராட் கோலி இந்தாண்டு ரூ.66 கோடி வருமான வரி கட்டி கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமான வரி கட்டிய நபராக உள்ளார். இரண்டாம் இடத்தில் மகேந்திர சிங் தோனி ரூ.38 கோடி வருமான வரி கட்டியுள்ளார்.

சச்சின்,தோனி பின்னுக்கு தள்ளிய விராட் கோலி;டாப் லிஸ்டில் புதிய உச்சம் ..வெளியான விவரம்! | Virat Kohli Highest Tax Paying Sportsperson

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரூ.28 கோடியும் சவுரவ் கங்குலி ரூ.23 கோடியும், ஹர்திக் பாண்டியா ரூ.12கோடியும் ,ரிஷப் பண்ட் ரூ.10 கோடியும் வருமான வரியாக கட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.