விஜய் பாடலுக்கு மைதானத்தில் குத்தாட்டம் போட்ட 'விராட் கோலி' - வைரலாகும் Video!

Virat Kohli Royal Challengers Bangalore Cricket Chennai IPL 2024
By Jiyath Mar 25, 2024 08:30 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்தில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை - பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.

விஜய் பாடலுக்கு மைதானத்தில் குத்தாட்டம் போட்ட

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இதில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 34 ரன்களுடனும்,

குஜராத் அணி வெற்றி; ஹர்திக்கின் எல்லை மீறிய பேச்சு - கொந்தளித்த ரசிகர்கள்!

குஜராத் அணி வெற்றி; ஹர்திக்கின் எல்லை மீறிய பேச்சு - கொந்தளித்த ரசிகர்கள்!

கோலி நடனம் 

ஜடேஜா 25 ரன்களுடனும் களத்திலிருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் சென்னை அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதற்கிடையில் சென்னை அணியின் பேட்டிங்கின் போது, சேப்பாக்கம் மைதானத்தில் நடிகர் விஜய்யின் "அப்படி போடு" என்ற பாடல் ஒலித்தது.

விஜய் பாடலுக்கு மைதானத்தில் குத்தாட்டம் போட்ட

இதனை கேட்ட பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மைதானத்தில் நடனம் ஆடினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை விராட் கோலியின் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.