IPL 2024: அமர்க்கள ஆரம்பம் - பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி!

MS Dhoni Chennai Super Kings Royal Challengers Bangalore Cricket IPL 2024
By Jiyath Mar 23, 2024 02:47 AM GMT
Report

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. 

சென்னை - பெங்களூரு        

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

IPL 2024: அமர்க்கள ஆரம்பம் - பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! | Csk Vs Rcb Csk Defeat Rcb By 6 Wickets

இதில், டூ பிளசிஸ் 35 ரன்களிலும், கோலி 21 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அனுஜ் ராவத் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்காக முஸ்தாபிசூர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

IPL போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் - ஆனால் ஒரு கண்டிஷன்!

IPL போட்டி: மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் - ஆனால் ஒரு கண்டிஷன்!

அபார வெற்றி 

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இதில், கெய்குவாட் 15 ரன்களிலும், ரவீந்திரா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த ரஹானே 27 ரன்களிலும், டேரெல் மிச்சேல் 22 ரன்களிலும் அவுட் ஆகினர்.

IPL 2024: அமர்க்கள ஆரம்பம் - பெங்களூருவை வீழ்த்தி சென்னை அபார வெற்றி! | Csk Vs Rcb Csk Defeat Rcb By 6 Wickets

பின்னர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியில் சென்னை அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.