ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. விராட் கோலியின் ஒற்றை பதிவு -இணையத்தில் வைரல்!

Virat Kohli Cricket India
By Vidhya Senthil Aug 25, 2024 09:45 AM GMT
Report

 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தது குறித்து இந்திய வீரர் விராட் கோலியின்  உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ஷிகர் தவான்

2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்காகத் தொடங்கிய ஷிகர் தவானின் கிரிக்கெட் பயணம் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகள் என 2315, 6793 மற்றும் 1579 ரன்களுடன் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் அவர் தன்னுடைய ஐபிஎல் தொடரில் 222 போட்டிகளில் விளையாடி 6,769 ரன்கள் குவித்துள்ளார்.

ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. விராட் கோலியின் ஒற்றை பதிவு -இணையத்தில் வைரல்! | Virat Kohli About Shikhar Dhawan S Retirement

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த இடதுகை வீரர்கள் வரிசையில் ஷிகர் தவானின் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். இந்த நிலையில் தான் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த ஜொலித்த ஷிகர் தவான்னுக்கு 2018 முதல் இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை .

மேலும் 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ஷிகர் தவானுக்கு வாய்ப்புகள் வழங்குவதை இந்திய அணி குறைத்துக் கொண்டது. இந்தச் சூழலில் தன்னுடைய ஓய்வை ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

விராட் கோலி

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் காணொளியில், “ஒவ்வொரு கதையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நாம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்குப் பக்கத்தைத் திருப்புவது அவசியமானது. அந்தவகையில் நான் என்னுடைய சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்” என்று காணொளியில் பேசியிருந்தார்.

ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்.. விராட் கோலியின் ஒற்றை பதிவு -இணையத்தில் வைரல்! | Virat Kohli About Shikhar Dhawan S Retirement

இந்த நிலையில் ஷிகர் தவான் ஓய்வு அறிவித்தது குறித்து இந்திய வீரர் விராட் கோலி பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வீரர் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில்,'' பயமறியா வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் நம்பிக்கைமிக்க ஓப்பனராக உயர்ந்தவர் தவான்.

எண்ணிலடங்கா நல்ல நினைவுகளை எங்களுக்குக் கொடுத்ததற்கு நன்றிகள். உங்களது டிரேட்மார்க் சிரிப்பை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுவோம்..!வாழ்க்கையின் அடுத்தகட்டப் பயணத்திற்கு வாழ்த்துகள் GABBAR" என்று தெரிவித்துள்ளார்.