என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK?

Chennai Super Kings Cricket Sports IPL 2024 Matheesha Pathirana
By Jiyath May 07, 2024 01:04 PM GMT
Report

சிஎஸ்கே அறையில் கோப்பையை காண வேண்டும் என்பதே தனது ஆசை என மதிஷா பதிரானா தெரிவித்துள்ளார்.

திஷா பதிரானா 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றிகள், 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK? | Matheesha Pathirana About Chennai Super Kings

மீதமுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றால் சென்னை அணி எளிதாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். இந்த தொடரில் இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரானா சென்னை அணிக்காக விளையாடி வந்தார்.

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்!

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்!

எனது ஒரே ஆசை.. 

இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "விரைவில் சிஎஸ்கே-வின் அறையில் ஐபிஎல் 2024 சாம்பியன் கோப்பையை காண வேண்டும் என்ற எனது ஒரே ஆசையுடன் விடைபெறுகிறேன்!

என்னோட ஒரே ஆசை இதுதான்.. IPL-ல் இருந்து விலகிய பதிரானா பதிவு - நிறைவேற்றுமா CSK? | Matheesha Pathirana About Chennai Super Kings

ஆசீர்வாதங்களையும், அன்பையும் பொழிந்த சிஎஸ்கே அணிக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். இந்த சீசனில் சென்னை அணிக்காக 6 போட்டிகளில் விளையாடிய பதிரானா, 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.