சிவம் துபேவுக்கு பிரச்சனை? இதுதான் CSK அணியில் நடக்குது - போட்டுடைத்த பயிற்சியாளர்!

Chennai Super Kings Cricket Shivam Dube Sports IPL 2024
By Jiyath May 06, 2024 01:19 PM GMT
Report

மிடில் ஆர்டர் குறித்து பெரிதாக கவலை கொள்ளவில்லை என சிஎஸ்கே பயிற்சியாளர்களில் ஒருவரான எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

சிவம் துபே

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2014 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அதில் 6 வெற்றிகள், 5 தோல்விகளுடன் புள்ளிப்படியியலில் 3-வது இடத்தில் உள்ளது.

சிவம் துபேவுக்கு பிரச்சனை? இதுதான் CSK அணியில் நடக்குது - போட்டுடைத்த பயிற்சியாளர்! | Shivam Dube Batting Form Is Good Says Csk Coach

இந்த தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கால் சென்னை அணி வீரர் சிவம் துபே பவுலர்களை வெளுத்து வாங்கி வருகிறார். அந்த அளவுக்கு அவரை சிஎஸ்கே அணி தயார் செய்துள்ளது. ஆனால், பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த 2 போட்டிகளில் சிவம் துபே டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பலமிழந்து இருப்பதாகவும், சிவம் துபேவின் பேட்டிங் ஃபார்மும் குறைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர்களில் ஒருவரான எரிக் சிம்மன்ஸ் "எங்கள் அணியின் மிடில் ஆர்டர் குறித்து பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் தரமான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்.

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்!

உங்க மனைவி தான்.. ஓப்பனாக சொன்ன விராட் கோலி - திகைத்துப்போன தினேஷ் கார்த்திக்!

வாய்ப்பு கிடைக்கும்

இதுவரை பெரியளவில் விளையாடவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் அசத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிவம் துபேவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஷாட்கள் விளையாடும் போது சில நேரங்களில் இப்படி நடப்பது சாதாரண விஷயம் தான்.

சிவம் துபேவுக்கு பிரச்சனை? இதுதான் CSK அணியில் நடக்குது - போட்டுடைத்த பயிற்சியாளர்! | Shivam Dube Batting Form Is Good Says Csk Coach

இதுவரை அசத்தலாக ஆடி வந்த சிவம் துபே, 2 போட்டிகளில் டக் அவுட்டாகி இருக்கிறார். இருந்தாலும் மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஸ்கோரை கொண்டு வந்தனர். இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே எங்களின் வீரர்கள் சில காயத்தில் இருந்தனர். அதேபோல் பிளேயிங் 11ல் இடம்பெறாத சில சிறந்த வீரர்கள் பெஞ்சில் இருந்தார்கள்.

அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருந்தோம். அப்படிதான் சிமர்ஜித் சிங் களமிறங்கி அசத்தி இருக்கிறார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தியது நிச்சயம் மேஜிக் தான். இதேபோல் சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்களும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.