Friday, Jul 4, 2025

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ!

Viral Video Iran World
By Jiyath a year ago
Report

தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து பெண் ஒருவர் அசத்தியிருக்கிறார்.

டீ பாத்திரம் 

தலைமுடியை வித்தியாசமான ஸ்டைலில் வெட்டிக்கொள்பவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அதற்கும் மேலாக தலைமுடியை நிஜமான டீ பாத்திரமாக வடிவமைத்து பெண் ஒருவர் அசத்தியிருக்கிறார். ஈரான் நாட்டை சேர்ந்தவர் சிகை அலங்கார நிபுணரான சயிதே அரியாய்.

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ! | Viral Video Of Tea Pot Inspired Hairstyle

இவர் மாடலிங் பெண் ஒருவரின் தலைமுடியை டீ பாத்திரம் போல அலங்காரம் செய்துள்ளார். முதலில் டீ பாத்திர வடிவில் சிறு கம்பிகளை வளைத்து அந்த பெண்ணின் தலையில் நிறுத்துகிறார்.

பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது - எச்சரிக்கும் ISRO தலைவர்!

பூமிக்கும், மனித குலத்துக்கும் பேராபத்து; நம்மால் தடுக்க முடியாது - எச்சரிக்கும் ISRO தலைவர்!

வைரலாகும் வீடியோ 

பின்னர் அதை சுற்றி தலைமுடியை சேர்த்து வைத்து ஒட்டி, இறுக்கம் தேவையான இடத்துக்கு ஜடை பின்னி கட்டி டீ பாத்திரமாக மாற்றுகிறார். இறுதியில் அதில் தண்ணீரையோ அல்லது ஆறிய டீயையோ ஊற்றி டீ கோப்பையிலும், மற்றொரு பாத்திரத்திலும் நிரப்பிக் காட்டுகிறார்.

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ! | Viral Video Of Tea Pot Inspired Hairstyle

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 36 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதை வியந்து பார்த்த பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.