கொத்தாக முடி கொட்டுதா? ஷாம்பூ யூஸ் பண்ணும்போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
ஷாம்பூ பயன்படுத்தும் வழிமுறை குறித்து பார்ப்போம்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல், நரைத்த முடி பிரச்சனை தான் தற்போது மிகப்பெரிய மன அழுத்தமாக இளைஞர்களிடையே உருவெடுத்துள்ளது. பெண்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் மத்தியிலும் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.
இந்நிலையில், முடி உதிர்வு பிரச்சனைகள் குறித்து சில தீர்வுகளை பார்ப்போம். பெண், ஆண், குழந்தை, முதியோர் உட்பட முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் சரியான முறையில் ஷாம்பூ மற்றும் எண்ணெய் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
ஷாம்பூ தடவும் முறை
ஷாம்பு போடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், தலையில் எண்ணெய் தடவி, முடி வேர்கள் வரை மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருந்த பிறகு, அடுத்த ஒரு மணி நேரம் உங்கள் தலைமுடியை டவல் அல்லது துணியால் மூடி வைக்கவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஷாம்பூ பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நன்றாக கழுவுங்கள்.
மேலும், வெந்தயத்தை இரவில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து, காலையில் சிறிது வெங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த பேஸ்ட்டை தலைமுடியில் ஒரு மணி நேரம் தடவி விடவும். அதன்பின், குளிர்ந்த நீரில் மட்டுமே தலைமுடியைக் கழுவவும். ஷாம்பூ போட்டு குளித்த பிறகு தான் இதனை செய்யவேண்டும்.
கற்றாழை
வாரம் இருமுறை இதை செய்வதன் மூலம், தலைமுடி மென்மையாகவும், மிருதுவாகவும், சேதமடையாமல் இருக்கும். முடி பளபளப்பாக இருக்க, கற்றாழையில் உள்ள ஜெல், உருளைக்கிழங்கு சாறு, சிறிது கருப்பட்ட வாழைப்பழம் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதனை முடியின் நுனியில் இருந்து வேர்கள் வரை நன்கு தடவி ஒரு மணி நேரம் விடவும். தொடர்ந்து ஷாம்பூ போட்டு கழுவவும்.