பிரபல ஓட்டல் சாப்பாட்டில் கிடந்த பேண்டேஜ்.... ஷாக்கான வாடிக்கையாளர் - வைரலாகும் வீடியோ
சாப்பாட்டில் பேண்டேஜ்
திருவண்ணாமலையில் பொன்ராயர் ஹோட்டலில் உணவில் காயங்களுக்கு ஒட்டும் பேண்டேஜ் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கொசமட தெருவில் பொன்ராயர் ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் நேற்று மதியம் ஒருவர் உணவு சாப்பிட வந்திருக்கிறார்.
அப்போது, அவர் சாப்பிடும் உணவில், காயங்களுக்கு ஒட்டப்படும் பேண்டேஜ் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஹோட்டல் ஊழியரிடம் இது குறித்து புகார் கொடுத்தார். ஆனால், ஓட்டல் ஊழியர்கள் அலட்சியமாக பார்த்து விட்டு மற்றவர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர்.
இதனால், கோபமடைந்த அந்த நபர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்.. வயித்துக்குள்ள புண் இருக்குறவங்க இந்த ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டா பேன்டேஜ் வயித்துல போய் புண்ணுல ஒட்டிக்கும்.ரெண்டே நாளுல புண் ஆறிடும்... என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சிவப்பு சேலையில்... ரசிகர்களின் மனதை கிறங்கடிக்கும் ராஷ்மிகா - தீயாய் பரவும் வீடியோ