சிவப்பு சேலையில்... ரசிகர்களின் மனதை கிறங்கடிக்கும் ராஷ்மிகா - தீயாய் பரவும் வீடியோ
நடிகை ராஷ்மிகா
தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தெலுங்கு தொடர்ந்து தமிழ் படங்களையும் நடித்து வருகிறார்
ராஷ்மிகா 2016-ம் ஆண்டு வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அழகு மட்டுமல்ல, ராஷ்மிகா செய்யும் சின்ன சின்ன க்யூட்டான செயல்கள்தான் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
இயல்பான தோற்றம், சகஜமாக பேசும் குணம் இவைதான் ராஷ்மிகாவிற்கு தனி சிறப்பு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, 'விஜய் 66' என அழைக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 66’ படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். 'தளபதி 66' படத்தில் இணைந்துள்ள ராஷ்மிகா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
வைரல் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடிகை ராஷ்மிகா சிவப்பு நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோ ஷூட் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அடடா... என்ன அழகு... இப்படி சேலையில் சும்மா சில்லுன்னு மனதை கொள்ளையடிக்கிறாங்களேன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.