இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் - ராஷ்மிகா க்யூட் போட்டோஸ் - தெறிக்க விடும் ரசிகர்கள்
தற்போது, நடிகர் விஜய்-நடிகை ராஷ்மிகா மந்தனா சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
ட்ரெய்லர் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இப்படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய், இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியுடன் கைகோர்த்துள்ளார்.
'விஜய் 66' என அழைக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 66’ படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.
அவரது பிறந்தநாளான நேற்று படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகை ராஷ்மிகா, பீஷ்மா படத்துக்கான ப்ரோமோஷன் ஒன்றின் போது, வெட்கத்துடன் தமிழ் இளைய தளபதி விஜய் மீது தனக்கு க்ரஷ் இருப்பதை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'தளபதி 66' படத்தில் இணைந்துள்ள ராஷ்மிகா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Finallyyyyy @Actorvijay ❤️ pic.twitter.com/qpmWb1oW8l
— Rashmika Mandanna FC (@iamRashmikah) April 6, 2022