நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு - தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் ஷாக்
நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்த சினிமாத்துறையினரும், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது.

9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் - பகிரங்கமாக வெளியிட்ட டுவிட் வைரல்
நாமலுக்காக முந்திக்கொண்டு வந்த அர்ச்சுனா! பைத்தியம் என பதில் வழங்கிய மகிந்த ஜெயசிங்கவால் சபையில் வாக்குவாதம் IBC Tamil
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil