9-வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க் - பகிரங்கமாக வெளியிட்ட டுவிட் வைரல்
எலான் மஸ்க்
டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்
பெண் ஊழியருடன் உறவு
எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் அதிகாரியுடன் உறவில் இருந்து வந்தார். தற்போது, இந்த ரகசிய உறவில் இரட்டை குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், எலான் மஸ்க் மற்றும் சிலிஸ் ஆகிய இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளின் பெயர் வைக்கும் போது தான் அதன் ஆவணங்கள் மூலம் இந்த செய்தி உறுதியாகி இருக்கிறது.
எலான் மஸ்க் மனைவிகள்
எலான் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் கனடாவை சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர். எலாஸ் மஸ்க்கிற்கு முதல் மனைவி மூலம் 5 குழந்தைகள் பிறந்தன. இதனையடுத்து, கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் 2 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது மொத்தமாக எலான் மஸ்க்கிற்கு 9 குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எலான் மஸ்க் டுவிட்
9-வது குழந்தை பிறந்தது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மக்கள்தொகை குறைந்து வருவதை தடுக்க தான் உதவுவதாக பதிவில் தெரிவித்திருக்கிறார்.
USA birth rate has been below min sustainable levels for ~50 years pic.twitter.com/v5PSLbvEAE
— Elon Musk (@elonmusk) May 24, 2022
கிரேனில் சிக்கிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய ஊழியர் : பதரவைக்கும் வீடியோ