கிரேனில் சிக்கிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய ஊழியர் : பதற வைக்கும் வீடியோ
கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் கட்டுமானப் பணி செய்துவந்த ஊழியர் ஒருவர் கிரேனில் இருந்து தொங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தரத்தில் தொங்கிய ஊழியர்
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் எதிர்பாராத விதமாக கிரேனில் சிக்கிக்கொண்டு பல நூறு அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கினார்.
சில நிமிடங்களில் அவரை சக ஊழியர்கள் பத்திரமாக தரையிறக்கி மீட்டனர். அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவரது கை கிரேனுடன் சிக்கிக் கொண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றும் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அதிகாரி ஒருவரை ஒண்டாரியோவின் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 79 ஆயிரத்து 370 பேர் லைக் செய்துள்ளனர்.