வீட்டில் திருட வந்தவனுக்கு Cake வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம்! - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Jul 01, 2022 11:47 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

திருடனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய குடும்பம்

அந்த வீடியோவில், வீட்டில் திருட வந்த சிறுவனுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் நள்ளிரவில் வீட்டில் திருட வந்திருக்கிறார்கள். அப்போது, வீட்டில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் திருட வந்தவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு சிறுவன் மட்டும் மாட்டிக் கொண்டான். மாட்டிக்கொண்ட சிறுவன் அழுதுக்கொண்டே இருந்துள்ளான். அவனிடம் ஏன் திருட வந்தாய் என்று கேட்டதற்கு அவன் தன் வாழ்க்கையில் நடந்த சோகக் கதையை சொல்லியுள்ளான்.

இன்றைக்கு எனக்கு பிறந்தநாள். இதுவரைக்கும் நான் பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது. எனக்கு யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து, அந்த வீட்டில் இருந்தவர்கள் அச்சிறுவனின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தனர். அப்போது, கேக் ஆர்டர் செய்து அந்த வீட்டில் திருட வந்த சிறுவனுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

viral video

விஜய் உருவத்தை முதுகில் பச்சை குத்திய ரசிகை - அன்போடு கட்டியணைத்த நடிகர் - வைரல் வீடியோ