விஜய் உருவத்தை முதுகில் பச்சை குத்திய ரசிகை - அன்போடு கட்டியணைத்த நடிகர் - வைரல் வீடியோ

Vijay Deverakonda
By Nandhini Jul 01, 2022 10:19 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவாகி இருக்கிறார். இளம் நடிகர் என்ற பெருமையும் இவர் பெற்றிருக்கிறார். இவருக்கென்று அதிகம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா தனது நீண்ட நாள் கனவு நனவான சொந்த தியேட்டரை திறந்தார். ஏ.வி.டி. சினிமாஸ் என்ற பெயரில் இந்த தியேட்டரை துவங்கு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இது விஜய் மற்றும் ஏசியன் சினிமாஸுக்குச் சொந்தமானது.

பச்சை குத்திய ரசிகை

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரசிகைக்கு விஜய் தேவரகொண்டாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அந்த ரசிகை விஜய் தேவரகொண்டா முன்பு தன் முதுகில் இருக்கும் டாட்டுவை காட்டினார். பின்பு விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் அவர் அழத் துவங்கினார். அப்போது, உடனே அருகில் சென்று அழுத ரசிகையை கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார் விஜய்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள், ரசிகைகள் விஜய்யை சந்திக்க எனக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Vijay Deverakonda

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இனி நாடு முழுவதும் தடை!