திருப்பதியில் வி.ஐ.பி தரிசன கடிதங்கள் ஏற்கப்படாது - பக்தர்கள் அதிர்ச்சி!
வி.ஐ.பி. தரிசனத்திற்காக பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தற்போது, விஐபி பிரேத்யேக தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க 34 கவுன்டரில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் பல மடங்காக அதிகரித்து வருகிறது.
வி.ஐ.பி. தரிசனம்
இந்நிலையில், கோடைக்காலங்களில் வி.ஐ.பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கோடை விடுமுறைக் காலங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர் மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது. மாட வீதிகளில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.
அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது. மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.