திருப்பதி தரிசனம்: இனி வரிசையில் நிற்க தேவையில்லை - தேவஸ்தானம் முக்கிய முடிவு!
திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட் அனுகுமுறை குறித்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
விஐபி தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தற்போது, விஐபி பிரேத்யேக தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை வாங்க 34 கவுன்டரில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய கொள்கையை அமல்படுத்தவுள்ளது.
தேவஸ்தானம் அறிவிப்பு
அதன்படி, சிபாரிசு கடிதங்களைச் சமர்ப்பித்த பக்தர்களின் மொபைலுக்கு இணைப்புடன் கூடிய செய்தி அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை பக்தர்கள் கிளிக் செய்தால் பணம் செலுத்தும் விருப்பம் தோன்றும். பின்னர் பணம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் பணம் செலுத்திய பிறகு டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த புதிய முறையை இரண்டு நாட்களாக சோதனை முறையில் செயல்படுத்தி வருகிறது. மேலும், ரத சப்தமி திருநாளில் திருமலையில் மூன்று நாட்களுக்கு பிப்(15, 16 மற்றும் 17) சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுகிறது.
அந்த நாளில் விஐபி பிரேக் தரிசனம் இருக்காது, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கை குழந்தைகளின் பெற்றோருக்கு சிறப்பு தரிசனம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.