திருப்பதி லட்டு குறித்த அதிர்ச்சி வீடியோ - தேவஸ்தானம் அளித்த விளக்கம்!
திருப்பதி லட்டு சர்ச்சை வீடியோவிற்கு தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி மலையில் நடைபெற்ற பேசும் டயல் ஈஓ நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை பக்தர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது சில பக்தர்கள் லட்டு பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவை குறைந்து இருப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, "லட்டு பிரசாதத்தின் சுவை, தரம் ஆகியவை குறைவதற்கான வாய்ப்பே கிடையாது.
தேவஸ்தானம் விளக்கம்
ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் ஒரு பார்முலாவின் அடிப்படையில் மட்டுமே தொடர்ந்து லட்டு பிரசாத தயாரிப்பு நடைபெறுகிறது. மேலும் இதற்காக தரமான நெய், தரமான முந்திரி, திராட்சை, கடலை மாவு ஆகியவையே பயன்படுத்தப்படுகிறது.
மனித தவறுகள் ஏதாவது நடைபெற்று இருக்குமா என்று ஆய்வு செய்யப்படும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய லட்டு தயாரிப்பு ஊழியர்கள், “நாங்கள் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக இந்த தொழில் ஈடுபட்டு இருக்கிறோம். லட்டு தயாரிக்க தேவையான பயிற்சிகள், ஆலோசனைகள் ஆகியவற்றை எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு வழங்கி உள்ளனர்.
அதிகாரிகளும் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர்.
எங்கள் முன்னோர்கள் வழங்கிய அறிவுரைகள், பயிற்சிகள் அதிகாரிகள் வழங்கும் ஆலோசனைகள் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து இன்றும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோம். எனவே லட்டு பிரசாதத்தின் தரம், சுவை ஆகியவை குறைவதற்கு வாய்ப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.