இனிமே ஒரு லட்டுதான் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம்

By Irumporai Mar 15, 2023 01:04 PM GMT
Report

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று திருப்பதி மலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அதில் மனிதர்களின் முகத்தை வைத்து அடையாளம் காணும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி தொழில்நுட்பத்தை கடந்த 1ம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறினார் .

 ஆன்லைன் மூலம் பதிவு :

திருப்பதி மலையில் பக்தர்களுக்காக தங்கும் அறைகள் ஓதுக்கீடு செய்யும் கவுண்டர்கள் ,மற்றும் அறையை காலி செய்வதற்காக பக்தர்கள் பயன்படுத்தும் துணை காரியாலயங்கள் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி அடிப்படையில் செயல்படுகிறது . அறையை ஒதுக்கீடாக பெறும் பக்தரே அந்த அறையை காலி செய்ய வேண்டும் ,அதை தவிர்த்து வேறு யாராவது அந்த அறைகளை காலி செய்தால் டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளதனை பற்றிக் கூறினார்.

இனிமே ஒரு லட்டுதான் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திருப்பதி தேவஸ்தானம் | Tirupati Devasthanam Announced

மேலும் ,தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாவும் ,இதனால் இடைத்தரகர்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அடுத்தப்படியாக ஆன்லைன் மூலம் தங்கும் அறைகைளை முன் பதிவு செய்யும் பக்தர்களுக்காக இந்த முறையை அமலுக்கு கொண்டு வரபோவதாக கூறினார்.

அதனை தொடர்ந்து ,'' இதனால் ஆன்லைன் மூலம் அறைகளை முன் பதிவு செய்யும் பக்தரே அந்த அறையை துணை விசாரணை காரியாலத்திற்கு நேரடியாக சென்று காலி செய்ய வேண்டும் .வேறு யாராவது அறையை காலி செய்தால் அந்த பக்தருக்கு டெபாசிட் பணம் திரும்ப கிடைக்காது என்றார் . 

 டோக்கன் கவுண்டரில் ரெககனைஷேசன் டெக்னாலஜி :  

திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்க்கு தலா ஒரு லட்டுக்கு உரிய டோக்கன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க இலவச லட்டு டோக்கன் கவுண்டர்களில் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும் என்றார் .

   ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே

இதனால்  ஒரே பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இலவச லட்டுகளை  வாங்க  டோக்கன் பெற முடியாது  என்றும் , அங்கு பணியில் இருப்பவர்  ஒரு நபருக்கு  ஒன்றுக்கு மேற்பட்ட டோக்கனை வழங்கவும்  முடியாது, பக்தர் ஒருவர் தன்னுடைய ஆதார் அட்டையை சமர்ப்பித்து  ஒரு முறை தங்குவதற்கு தேவையான  அறையைப்  பெற்ற பின் 30 நாட்கள்  சென்ற பின் மட்டுமே  மீண்டும்  அறையை பெற முடியும்  என்று கூறினார் .