ராகுலுடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், புனியா சந்திப்பு - ஹரியாணாவில் போட்டி?
மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
ராகுலுடன் சந்திப்பு
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 8-ந் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ஆளும் பாஜகவுக்கு சொற்பமான இடங்கள்தான் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
ஹரியாணாவில் போட்டி?
இந்நிலையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பஜ்ரங் புனியாவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், வினேஷ் போகத்தும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.