தளபதியின் த.வெ.க மாநாடு..ராகுல் காந்தி பங்கேற்பு ? வெளியான தகவல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
த.வெ.க மாநாடு
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். ஆனால் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் இலக்கு எனத் தெரிவித்து இருந்தார் .
இதற்காகக் கட்சிப் பணியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் விரைவில் மாநாடு நடைபெறும் எனவும் விஜய் அறிவித்தார். மேலும் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விஜய் கட்சித்தொடங்குவதற்கு ராகுல்காந்திதான் காரணம் எனவும் அக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய விஜயதரணி தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி
ராகுல்காந்தியுடனான விஜய்யின் நட்பு உள்ளிட்டவற்றின் காரணமாக ராகுல் காந்தி மாநாட்டில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கு தவெக தரப்பில் திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், மாநாட்டில் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பிருப்ப இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.