நீட் தேர்வு தேவையில்லை....த.வெ.க தலைவர் விஜய்க்கு வரும் ஆதரவும் - எதிர்ப்பும்!!
இன்று கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் த.வெ.க தலைவர் விஜய் நீட் தேர்வு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
நீட் தேவையில்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நடத்தும் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், அவர் நீட் குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
அவர் பேசும் போது, தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஏற்பட்டதாக கூறியது மட்டுமின்றி, நீட் தேர்வு விலக்கப்படவேண்டும் என்பது தனது பரிந்துரை என பேசினார்.
இதற்கு, தமிழக கட்சி தலைவர்கள் பலர் கலவையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவினர் தொடர்ந்து கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்கள்.
ஆதரவும் எதிர்ப்பும்
தெலுங்கானா - புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்து விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியது வருந்தத்தக்கது. ஊக்கப்படுத்தும் வகையில் விஜய் பேசியிருக்க வேண்டும். நிர்வாக குளறுபடிகளை சீர் செய்யலாமே ஆனால், நீட்டை ஒதுக்க முடியாது என தெரிவித்தார்.
அதே போல, பாஜகவின் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதே நேரத்தில் ஒரு புறத்தில் இருந்து விஜய்யின் கருத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் விஜய்யின் கருத்தை வரவேற்றுள்ளார்.