ஒன்றிய அரசே....இனியும் நீட் தேர்வு தேவையில்லை!! த.வெ.க தலைவர் விஜய் அதிரடி!!
Vijay
Tamil nadu
BJP
NEET
Thamizhaga Vetri Kazhagam
By Karthick
இன்று நடைபெற்று வரும் விஜய் கல்வி விருது விழாவில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நீட் குறித்து பேசியுள்ளார்.
நீட் தேவையில்லை
- அவரின் பேசியதின் தொகுப்பு வருமாறு, 1975-ஆம் ஆண்டிற்கு முன் மாநில பட்டியலில் இருந்த கல்வியை ஒன்றிய அரசு பொதுப் பட்டியலில் சேர்த்தது.
- சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும்.
- நீட் தேர்வால் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரான ஒன்று. மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.
- இனியும் நீட் தேர்வு தேவையில்லை என்பது எனது பரிந்துரை.
- நீட் தேர்வு குளறுபடிகளால் அத்தேர்வின் மீது நம்பகத்தன்மை போய்விட்டது.
- தமிழக அரசு கொண்டுவந்துள்ள நீட் விலக்கு மசோதாவை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
- மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நீட் விலக்கு ஒன்றே தீர்வு. மாநிலங்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் இருக்கவேண்டும்.
- பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் அல்ல.
- .மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேறு ஓவர் முறையில் தேர்வு நடத்தினால் எப்படி.