தோள் மீது கை போட்ட விஜய் - உடனே எடுக்க சொன்ன மாணவி!! விருது விழாவில் சலசலப்பு
நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வருகின்றது.
கல்வி விருது விழா
மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. காலை முதல் மாணவிகளுக்கு பரிசுகளை அளித்து வரும் விஜய், அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து அவர்களுடன் போட்டோவும் எடுத்து வருகின்றார்.
இந்த சூழலில் தான், மரியாதை செய்து மாணவி ஒருவருடன் போட்டோ எடுக்க விஜய் அவர் தோள் மீது கைவைத்த நிலையில், மாணவி சட்டென கையெடுக்க சொன்னதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கையெடுக்க...
தோளிலிருந்து கையெடுக்க சொன்ன அம்மாணவி விஜய்யின் கையை பிடித்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளுக்கு விஜய் வைர கம்மல் பரிசாக அளித்திருக்கிறார்.
அதே போல, நாங்குநேரி மாணவன் சின்னத்துரையையும் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய்.
இன்று காலை முதல் சமூகவலைத்தளம், செய்தி தொலைக்காட்சிகள் என அனைத்திலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கல்வி விருது விழா தான் ஹாட் நியூஸ்.