என் அன்பு தளபதியே...விஜய் நடத்தும் கல்வி விழா - பாராட்டுகளை அள்ளி வீசிய சீமான்

Vijay Naam tamilar kachchi Seeman Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 28, 2024 08:07 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் நடத்திவரும் கல்வி விருது வழங்கும் விழா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீமான் பதிவு  

அதில்,

கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை!

seeman congratulates vijay student function

ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது; 

போன முறை கொடுத்த நெக்லஸ் விட விலை அதிகம் ..விஜய் மாணவிகளுக்கு அளித்த விலையுர்ந்த கிப்ட் ?

போன முறை கொடுத்த நெக்லஸ் விட விலை அதிகம் ..விஜய் மாணவிகளுக்கு அளித்த விலையுர்ந்த கிப்ட் ?

அன்புத்தளபதி

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி,

vijay student function

தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!