போன முறை கொடுத்த நெக்லஸ் விட விலை அதிகம் ..விஜய் மாணவிகளுக்கு அளித்த விலையுர்ந்த கிப்ட் ?
நடைபெற்று வரும் பாராட்டு விழாவில் நடிகர் விஜய் மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுகளை அளித்து வருகிறார்.
பாராட்டு விழா
சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்று வரும் மாணவ - மாணவிகளை பாராட்டும் விழாவில் நடிகர் - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரிசுகளை அளித்து வருகின்றார்.
கடந்து முறை நந்தினி என்ற மாணவிக்கு அவர் வைர நெக்லஸ் பரிசளித்திருந்தார். இம்முறை, 12ம் வகுப்பில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த பிரதிக்ஷா என்ற மாணவிக்கு வைரக்கம்மல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வைர கம்மல்
அதே போல, திருப்பூர் பல்லடம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டு தாம்பரம் பகுதியை சேர்ந்த தொஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைரக்கம்மல் வழங்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வில் தர்மபுரி கரூர் தொகுதி சந்தியா என்று மாணவிக்கும், தருமபுரி மரூர் பகுதியை சேர்ந்த தேவதர்ஷினி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை காவியாஸ்ரீ, ஈரோடு கோபிசெட்டிபாளையம் ஆர்.கோபிகா, ராமநாதபுரம் முதுகுலத்தோரை காவியா ஜனனி, திருநெல்வேலி ராதாபுரம் சஞ்சனா ஆகியோருக்கு வரிசையாக வைரக்கம்மல் வழங்கினார் விஜய்.
இம்முறை பல மாணவிகளுக்கும் விஜய் வைர கம்மல் அளித்து சிறப்பித்துள்ளார். இதில் முக்கியமான தமிழகத்தில் பெறும் சலசலப்புகளை ஏற்படுத்திய திருநெல்வேலி நாங்குநேரி பகுதியை சேர்ந்த சின்னத்துரை மாணவனையும் நேரில் அழைத்து பாராட்டி சிறப்பித்திருக்கிறார் விஜய்