கமகம'வென தயாராகும் உணவு - விஜய் மாணவர் பாராட்டு விழாவின் உணவு பட்டியல் கவனிச்சீங்களா?

Vijay Tamil nadu Chennai Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 27, 2024 08:05 PM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையியல் நடைபெறும் மாணவர்களுக்கான பாராட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.

பாராட்டு விழா

பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவினார் பிரபல நடிகர் விஜய். ஆனால், கட்சி துவங்குவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு மாணவர்களை சந்தித்து வாழ்த்தினர்.

vijay student event 2023

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களை வரவழைத்து அவர்களை பாராட்டியது மட்டுமின்றி, அவர்களிடம் சிறப்புரையும் ஆற்றினார்.

கட்சி துவங்கிய நிலையில், இந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பே பதிலாக வெளியாகியுள்ளது.

உணவு  

ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நிகழ்வு நடைபெறும் சூழலில், அது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு அவர் இக்கடிதத்தை எழுதியிருக்கிறார்.

vijay student event 2023

இந்நிலையில் தான், இந்த நிகழ்வில் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் சிலவெளிவந்திருக்கின்றன. 700'க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொள்வார்கள் என கருதப்படும் நிலையில், அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

மாணவர்களுக்கு பாராட்டு விழா - அரசுக்கு த.வெ.க தலைவர் எழுதிய பரபரப்பு கடிதம்

மாணவர்களுக்கு பாராட்டு விழா - அரசுக்கு த.வெ.க தலைவர் எழுதிய பரபரப்பு கடிதம்

சமூகவலைத்தளத்தில் வெளியான செய்திகளின் படி வெள்ளை சாதம், வத்தக் குழம்பு, சாம்பார், தக்காளி ரசம், அவரை பொரியல், உருளைக்கிழங்கு, வடை, மோர், அவியல், பாயாசம் அப்பளம் போன்றவை இடம்பெறுவதாக கூறப்படுகிறது.