மாணவர்களுக்கு பாராட்டு விழா - அரசுக்கு த.வெ.க தலைவர் எழுதிய பரபரப்பு கடிதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை பாராட்டும் விழா இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது.
விஜய் பாராட்டு விழா
இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவினார் பிரபல நடிகர் விஜய். ஆனால், கட்சி துவங்குவதற்கு முன்பாகவே அவர் கடந்த ஆண்டு மாணவர்களை சந்தித்து வாழ்த்தினர்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களை வரவழைத்து அவர்களை பாராட்டியது மட்டுமின்றி, அவர்களிடம் சிறப்புரையும் ஆற்றினார்.
கட்சி துவங்கிய நிலையில், இந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பே பதிலாக வெளியாகியுள்ளது.
கடிதம்
நாளை அதாவது ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இந்நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தான், நாளை சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நிகழ்வு நடைபெறும் சூழலில், அது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு அவர் இக்கடிதத்தை எழுதியிருக்கிறார்.