விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நா.த.க'விற்கு ஆதரவா? அதிரடி முடிவெடுத்த தமிழக வெற்றிக் கழகம்!!

Vijay Viluppuram Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 18, 2024 05:34 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து த.வெ.க தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி

திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Vikravandi by election

திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மைக்கா? விவசாயியா? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - சின்னத்தை அறிவித்த சீமான்!!

மைக்கா? விவசாயியா? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - சின்னத்தை அறிவித்த சீமான்!!


அதிமுக தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளது. மும்முனை போட்டி நிலவும் நிலையில், விரைவில் தேர்தல் அரசியலில் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சி ஆதரவு தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

யாருக்கு ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


கழகத் தலைவர் அவர்கள். விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று.

வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Vijay thamizhaga vetri kazhagam

குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்.