மைக்கா? விவசாயியா? விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - சின்னத்தை அறிவித்த சீமான்!!
நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சியாக கடந்த தேர்தலில் உருப்பெற்றுள்ளது.
நாம் தமிழர்
தமிழகத்தில் தொடர்ந்து சீரான வேகத்தில் ஒரு கட்சி வளர்ந்து வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். சீமானுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும் பட்சத்திலும், அவரின் வளர்ச்சியில் எந்தவித விவாதமும் யாருக்குமே இருக்காது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சின்னம் பறிக்கப்பட்ட போதிலும், ஒரே மாதத்தில் புதியதொரு சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து 8% வாக்குகளை கடந்துள்ளார் சீமான்.
வரும் விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுவதை அதிகாரபூர்வகமாக அறிவித்த சீமான், கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார்.
சின்னம்
தற்போது எந்த சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. முன்னர் வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னமா? அல்லது கடந்த தேர்தலில் பெற்ற மைக் சின்னத்திலா? என்ற குழப்பம் பலரிடமும் உள்ளது.
மாநில அந்தஸ்து பெற்ற கட்சி, தனக்கு வேண்டுமென்ற சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெறலாம். நாம் தமிழர் கட்சிக்கு ராசியான சின்னமாக மைக் சின்னம் அமைத்துள்ள நிலையில், விக்கிரவாண்டி இடைதேர்தலிலும் அக்கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.