இந்துக்கள் பற்றி ராகுல் சொன்னது தான் சரி - சங்கராச்சாரியார் ஆதரவு!
இந்துக்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு சங்கராச்சாரியார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்திக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக இணையத்தில் சில கருத்துகள் பரவியது.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஜோஷி மடத்தின் 46வது சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்தா, ராகுல் காந்தியின் முழு உரையையும் நாங்கள் கவனமாகக் கேட்டோம்.
சங்கராச்சாரியார் ஆதரவு
இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்பதையே அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியிருந்தார். இப்போது ராகுல் காந்தியின் உரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வெட்டி, அதை ஆன்லைனில் பரப்பி வருகிறார்கள்.
அவர்கள் உண்மையைச் சிதைத்துப் பரப்பி வருகிறார்கள். ராகுல் காந்தியின் பேச்சை முழுமையாகக் கேட்காமல் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் இணையத்தில் பரப்புவது தவறானது.. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.