121 பேரின் உயிரை பறித்த கொடூர சம்பவம்; ராகுல் காந்தி நேரில் ஆறுதல் - கதறிய மக்கள்!

Indian National Congress Rahul Gandhi Uttar Pradesh Death
By Sumathi Jul 05, 2024 04:25 AM GMT
Report

ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

121 பேர் பலி

உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.

rahul gandhi

இதில் கூட்டம் முடிந்து வெளியேறிய போது நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 121 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை சுமார் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம் - ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம் - ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர் இரங்கல்

ராகுல் காந்தி சந்திப்பு

இதற்கிடையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இந்நிலையில், மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, அங்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

uttar pradesh

அலிகரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.