ராகுல் பாஜகவை தான் விமர்சித்தார்; இந்துக்களை இல்லை - பிரியங்கா காந்தி காட்டம்!

Rahul Gandhi BJP Delhi Priyanka Gandhi
By Sumathi Jul 02, 2024 04:57 AM GMT
Report

ராகுல் இந்துக்களை விமர்சிக்கவில்லை என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல்  விமர்சனம்

லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது, பாஜக மற்றும் ராகுல் காந்திக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராகுல் பாஜகவை தான் விமர்சித்தார்; இந்துக்களை இல்லை - பிரியங்கா காந்தி காட்டம்! | Priyanka Gandhi Says Rahul Slams Bjp Not Hindus

அந்த சமயத்தில், “இந்துக்கள் வன்முறை, வெறுப்பை பரப்புவது இல்லை. ஆனால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே பரப்புகின்றனர்” என ராகுல் தெரிவித்தார். இதற்கு வன்முறையை மதத்துடன் இணைப்பது தவறு எனக் கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினார்.

போரை நிறுத்தும் மோடி வினாத்தாள் கசிவை நிறுத்த மாட்டாரா - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி

போரை நிறுத்தும் மோடி வினாத்தாள் கசிவை நிறுத்த மாட்டாரா - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி

பிரியங்கா காந்தி கருத்து

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “ராகுல், இந்துக்களை அவமதிக்கவில்லை. அவர் தனது உரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பாஜக குறித்தும், பாஜக தலைவர்கள் குறித்தும் தான் அவர் பேசி இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

priyanka gandhi

மேலும், தனது எக்ஸ் தள பக்கத்தில், “பணவீக்கத்தை எண்ணி பெண்களும், கருப்புச் சட்டங்களை எண்ணி விவசாயிகளும், அக்னிவீரர் திட்டத்தை எண்ணி இளைஞர்களும், வினாத்தாள் கசிவை எண்ணி மாணவர்களும், தங்கள் மீதான வெறுப்பு மற்றும் வன்முறையை எண்ணி சிறுபான்மை மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அச்ச உணர்வை எங்கும், எதிலும் பரப்புகிறது. மக்கள் மத்தியில் அச்சம், வன்முறை மற்றும் வெறுப்பினை பரப்பும் யாரும் அதன் ஊடாக பலன் அடைய முடியாது. பாஜக இந்த பாணி அரசியலை இப்போது நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.