சிவன் படத்தை வைத்து பேசிய ராகுல் காந்தி - பாஜக எதிர்ப்பு ; மன்னிப்பு கேட்க கோரி அமளி

Amit Shah Rahul Gandhi Narendra Modi Lord Shiva
By Karthikraja Jul 01, 2024 10:05 AM GMT
Report

சிவன் படத்தை வைத்து பேசிய ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சிவனின் படத்தை கையில் ஏந்திக்கொண்டு, சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. அகிம்சையின் சின்னம். சிவனின் கை முத்திரை தான் காங்கிரஸின் சின்னம்.

rahul gandi shiva photo

உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள் பாஜகவினர் என பேசினார். இதற்கு பிரதமர் மோடி எழுந்து நின்று, ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் என எதிர்ப்பு தெரிவித்தார். 

போரை நிறுத்தும் மோடி வினாத்தாள் கசிவை நிறுத்த மாட்டாரா - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி

போரை நிறுத்தும் மோடி வினாத்தாள் கசிவை நிறுத்த மாட்டாரா - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி

மோடி

சிவன் படத்தை கட்டுவதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது பதாகை அல்ல ஆவணம், சிவன் படத்தைக் காங்கிரஸ் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம் என பேசினார். மேலும், சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போல தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படுகிறோம். அரசியலமைப்பு மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

எங்களில் பலரும் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டோம். இன்னும் சில தலைவர்கள் சிறையில் உள்ளனர். பிரதமரின் உத்தரவாலும், இந்திய அரசின் உத்தரவாலும் நான் தாக்கப்பட்டேன். அதில் மிகவும் மகிழ்ச்சியான பகுதி அமலாக்கத்துறையால் செய்யப்பட்ட 55 மணிநேர விசாரணையாகும். 

amitsha speech parliment

பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் எனவும், காந்தியை ஆவணப் படம் மூலமே அவரை உலகம் அறிந்ததாகவும் அவர் கூறுகிறார். இவர் வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் இதை அறிந்திருக்கலாம் என பேசியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.